அல்லல் போம் !
வல் வினை போம் !
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் !
போகாத் துயரம் போம் !
நல்ல குணம் அதிகமாம் :
அருணைக் கோபுரத்துள்
வீற்றிருக்கும்
செல்வக் கணபதியை
கை தொழுதக் கால் !
அருணை எனப்படும் திருவண்ணாமலை
கோபுர வாசலில் வீற்றிருக்கும் ,
செல்வக் கணபதியை ,
கை தொழுது கும்பிட்டால் ,
அல்லல் போம் .! ....
எல்லா விதமான தடங்கல்களும்,
தொல்லைகளும் போகும் !
வல் வினை போம் !......
என்ன செய்தாலும் , பின் தொடர்ந்து
பயனைத் தரும் , நாம் செய்த தீய வினைகளும்
அழிந்து போகும் !
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் !
அடுத்தடுத்து பிறவிகள் எடுக்க காரணமான ,
முன் வினைகளின் தொல்லையும் தீர்ந்து போகும் !
போகாத் துயரம் போம் !
என்றும் நீங்காமல் மனதில் நிற்கும்
துயர நினைவுகள் எல்லாம்
தெளிந்து போகும் !
அது மட்டுமா?
நல்ல குணம் அதிகமாம் !
நல்ல குணங்கள் நம்மில் மேன்மேலும் பெருகும் !
இந்த நாள் இனிய நாள் !
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment