தந்தை இருந்தும்
தாயும் இருந்தும்
சொந்தம் எதுவுமில்லே !..
மனதைத் தொடும் பாடல் வரிகள் ..
சிந்து பைரவி என்ற திரைப்படத்திலிருந்து !
இந்த வரிகள் ஒரு கற்பனைக் கதைக்காக எழுதப் பட்ட
பாடல் வரிகளா ? அல்லது அந்த பாடலாசிரியாரின் உள்ளத்தில்
எழுந்த குமுறல்களா ?
2014, June மாத இறுதியில் , திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் , சிறுகதை விமர்சனப் போட்டிக்காக வெளியிடப்பட்ட
சிறு கதை " தாயுமானவள் " .
இந்த கதையும் , கதையின் கருத்தும் என்னுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது !
இந்த போட்டியில் கலந்து கொள்ள விமர்சனம் எழுத முயற்சித்தேன் !
முடியவில்லை !
ஏற்படுத்திய அழகான கருவை, மிக மிக நேர்த்தியாக , அழகான
வரிகளில் வெளியிட்டிருந்தார் , திரு. திரு. வை. கோபாலகிருஷ்ணன்
அவர்கள் !
பல கதைகளை எழுதி, பரிசு பெற்றிருக்கும் கதாசிரியரை , இதற்காக
பாராட்டப் போவதில்லை .....!
மாற்றாக,
நன்றி கூறிக்கொள்கிறேன் !
என்னை துணிந்து ஒரு முடிவு எடுக்க ஊக்குவித்தது,
திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் " தாயுமானவள் "
என்ற சிறுகதை !
இன்று, என் சிறிய குடும்பத்தில் , 10ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்
ஒரு இளம் பெண் வளைய வந்து கொண்டிருக்கிறாள் !
மிகச் சரியானதொரு சமயத்தில் , " தாய்மானவள் " என்ற
சிறந்த கதையை பதிவிட்டு, என்னை ஊக்குவித்த
திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு ,
என் மனமார்ந்த நன்றிகள் !
அன்புள்ள ஐயா, வணக்கம்.
ReplyDeleteதங்களின் இந்தப்பதிவு மிகவும் உருக்கமாக உள்ளது ஐயா.
என்னுடைய அந்த சிறுகதை ஏதோவொரு நோக்கத்திற்காக அன்று எழுதப்பட்டிருப்பினும், அது தங்களுக்குள் இவ்வளவு ஒரு மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது கேட்க என் மனம் நெகிழ்ந்து விட்டது ஐயா.
தங்களின் உயர்ந்த உள்ளத்திற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
அந்த அதிர்ஷ்டசாலிப் பெண்ணுக்கும் என் மனமார்ந்த ஆசிகள்.
>>>>>
This comment has been removed by the author.
ReplyDelete//தந்தை இருந்தும்
ReplyDeleteதாயும் இருந்தும்
சொந்தம் எதுவுமில்லே !..
மனதைத் தொடும் பாடல் வரிகள் ..
சிந்து பைரவி என்ற திரைப்படத்திலிருந்து !
இந்த வரிகள் ஒரு கற்பனைக் கதைக்காக எழுதப் பட்ட
பாடல் வரிகளா ? அல்லது அந்த பாடலாசிரியாரின் உள்ளத்தில்
எழுந்த குமுறல்களா ?//
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் சிகரம் திரு. பாலச்சந்தர் அவர்களின் படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பவன் தான் நானும்.
இந்தப்படத்தினை நானும் பலமுறை பார்த்து மிகவும் வியந்து போய் உள்ளேன்.
இந்தப்பாடலில் என் மனமும் உருகிப்போய் உள்ளது.
மிகப்பொருத்தமாக அதனை இங்கு சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
இதே படத்தினில் நடிகர் சிவக்குமாருக்கு மனைவியாக வரும் சுலக்க்ஷணா என்ற கதாபாத்திரத்தையும் அவரின் நடிப்பினையும் நான் மிகவும் ரஸித்துள்ளேன்.
பல பிரபலங்களுக்கு இதுபோலத்தான், ரஸனை முற்றிலும் மாறியுள்ள வாழ்க்கைத்துணை அமைந்து விடுகிறது. இதெல்லாம் இறைவனின் திருவிளையாடல்கள் + அவன் போடும் அற்புதமான முடிச்சுகள் என்று நினைத்துக்கொள்வதுண்டு.
அந்தப்படத்தில் நடிகர் சிவக்குமார் தனக்கு நடைபெற்ற பாராட்டு விழாவைப்பற்றியும், அதில் நடந்த சில விசித்திர சுகானுபவங்களைப் பற்றியும் மிகவும் சீரியஸ் ஆகத்தன் மனைவி சுலக்க்ஷணாவிடம் ஆசையாகச் சொல்ல நினைக்கும்போது, அவள் தான் வாங்கிய கத்திரிக்காயைப்பற்றியும், அதிலிருந்த பூச்சி புழுக்களைப்பற்றியும், அதில் அந்தக்கத்திரிக்காய் வியாபாரியால் தான் ஏமாற்றப்பட்டது பற்றியும் பிரமாதமாக சீரியஸாக தன் கணவனிடம் சொல்லுவாள் :)
அந்த இடத்தினில் Director KB Sir அவர்களின் திறமையை எண்ணி நான் வியந்தது உண்டு. ஏனெனில் எனக்கும் அதுபோலவே [அந்தப்படத்தினில் வரும் சுலக்க்ஷணா போன்ற] ஓர் மிகவும் அன்பான விசித்திரமான, என் இலக்கிய ரஸனைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட மனைவி அமைந்திருக்கிறாள்.
என் ‘சுடிதார் வாங்கப்போறேன்’ கதையைப்படித்தீர்களானால் நான் சொல்ல வருவது என்னவென்று தங்களுக்கும் புரியக்கூடும்.
http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html
அன்புடன் கோபு [VGK]