Thursday 7 May 2020

கற்றல்

கற்றல்

சொல்லிக் கொடுப்பதில் எந்த
சிரமம் இல்லை. 
சொல்லிக்கொடுத்ததை, 
சொல்லிக் கொடுத்த
விதத்தில் புரிந்துகொள்வதுதான்
சிரமம். 
கற்றுக் கொள்பவன்,
சொல்லிக் கொடுப்பவன் மேல் தன்
முழுக் கவனத்தையும் செலுத்த 
வேண்டி இருக்கிறது. 
அப்படி ஒரு கவனம் வர, 
ஆர்வம் தேவை. 
இந்த ஆர்வத்திற்கு அப்பால்,
சொல்லிக் கொடுப்பவனுக்கு
விஷயம் தெரியும் என்ற 
நம்பிக்கை, கற்றுக் கொள்பவனுக்குத்
தேவைப்படுகிறது.
கற்றுக் கொள்ள. நல்ல சூழ்நிலையும்
நல்ல நேரமும் தேவைப்படுகிறது. 
எனவேதான், அன்றைய 
குருகுலங்களும், ஆசிரமங்களும்
பசுமை நிறைந்த சூழ்நிலையில்
அமைக்கப்பட்டன.
70, 80 வரை பள்ளிக்கூடங்களும்,
கல்லூரிகளும், ஊருக்கு வெளியே
இருந்தன. 
கற்றுக் கொள்வதில் தேவைப்படுவது
கவனம். கவனம் குறைந்தால்,
நஷ்டம் கற்றுக் கொள்பவனுக்கேத் 
தவிர, சொல்லிக் கொடுப்பவனுக்கு 
இல்லை. 
எல்லாப் படிப்பும், ஒன்றின் 
தொடர்ச்சியாய் ஒன்று என்று
போவது. ஒரு இடத்தில் கவனம்
குறைய, ஒரு பள்ளம் விழும். மற்ற
விஷயங்கள் புரியாது போகும். 
எனவே, எதையும் கற்கும்போது
ஆர்வமும், கவனமும் தேவை !

ஹரி ஓம் !

No comments:

Post a Comment