துளசி தாசரின்
இராமாயணம்
எழுத்துச் சித்தர் திரு. பாலகுமாரனின் ஆசைக் கடல்
என்ற நாவலிலிருந்து ,
துளசி தாசர் சமஸ்கிருதத்தில் எழுதவில்லை .
கடி இந்தியில் எழுதியிருக்கிறார் ,
கடி இந்தி என்பது பேச்சு மொழி இந்தி ,
எளிமையான இந்தி என்றும் வைத்துக்கொள்ளலாம் .
அதில் ஓர் இடம்.
ராமனும் சீதையும் சந்தித்துக் கொண்ட இடம் , ஒரு நந்தவனம்.
காலையில் அங்கே உலாவ, ராமனும் லட்சுமணனும் ,
அனுமதி கேட்டு நுழைகிறார்கள் .
சீதை அங்கு தோழிகளுடன் வருகிறாள்,
நந்தவனத்தின் வழியே கோயிலுக்குப் போகவேண்டும் ,
சீதை, ராமரையும் லட்சுமணனையும் பார்த்துவிடுகிறாள்,
யாரென்று விசாரிக்கிறாள்.....
அவர்கள் அரச குமாரர்கள், விசுவாமித்திரருடன்
வந்திருக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்கிறது.
ராமரைப் பார்த்த கண்களை அவரிடமிருந்து நகர்த்தவே
அவளால் முடியவில்லை. தோழிகள் கேலி செய்வார்களே
என்ற பயம். நந்தவனத்தின்மேல் மிக அக்கறை உள்ளவள்
போல, அன்றுதான் புதிதாய் பார்ப்பது போல், அது என்ன பூ ,
அந்த மான் என்ன வகை என்று பலதும் திசை காட்டி
பேசுகிறாள்.
ராம, லட்சுமணர்கள் யாரென்ற கேள்வியும்,
அடுத்த கேள்விகளும் ஒன்றே, சாதாரணமானதே
என்பதான பாவம், நடிப்பு. ஆனால், அவள் விசாரித்த பூவும்,
மானும் ராமர் இருக்கும் திசையில்தான் இருக்கின்றன .
ராமரை பார்க்க இது ஒரு சாக்கு .
ராமரும், சீதையைப் பார்த்துவிடுகிறார். அவருக்கும் அதே நிலை.
மறுபடி, மறுபடி பார்க்கத் தூண்டுகிறது , சீதையின் வனப்பு .
மனசு தடுமாறுகிறது. யாரிடம் பேச....
அருகே, தம்பி லட்சுமணன் மட்டுமே. லட்சுமணனுக்கு, ராமரின்
அமைதியின்மை புதியதாய், வேடிக்கையாய் இருக்கிறது.
லட்சுமணன், தன்னை, தன் மாறுதலைக் கவனித்துவிட்டான் என்று
ராமருக்குப் புரிந்து விடுகிறது.
சீதை நந்தவனத்தைவிட்டு போக, நெடிய பெருமூச்சு
அவரிடமிருந்து கிளம்புகிறது .
லட்சுமணா !
என்ன என்பதுபோல் ராமரைப் பார்க்கிறார் , லட்சுமணன் .
" அந்த அரசகுமாரி சீதையை நான் மூன்று முறைகளுக்கு மேல்
பார்த்து விட்டேன் . என் வாழ்வில் இதுவரை நான் எந்த
பெண்ணையும் இவ்விதம் பார்த்ததில்லை . கனவிலும் கூட
பிற பெண்களைக் கண்டதில்லை. மனம் அலைந்ததில்லை .
இப்போது என் சீதையை இவ்விதம் பார்த்தேன் .
எனக்கு கவலையாய் இருக்கிறது, லட்சுமணா ! " என்றாராம், ராமர்.
துளசிதாசர் இராமாயணத்தின் இந்த பகுதிக்கு பின்
தொடர்கிறது, எழுத்துச் சித்தரின் எழுத்துக்கள்.
" ராமன் உத்தமன் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும் .
இளைஞன், அழகன், அரச குமாரன், விவித்தையில் நிபுணன், சகல கலைகளையும்
கற்று தேர்ந்தவன். ஒரு பெண்ணை, சீதையை மறுபடி, பார்க்க நேர்ந்ததற்கு
வருத்த்ப்படிகிறான், ராமன். அப்படி தோன்றியதை ஒளித்துக் கொள்ளவில்லை..
தோழனைப்போல் உள்ள தம்பியிடம் வெளிப்படுத்தி விடுகிறான். அப்படி தம்பியிடம்
தன் மனசைச் சொன்னபோது , தான் பார்த்தது பற்றி நியாயப்படுத்தவில்லை.,
கரவப்படவில்லை, கவலைப்படுகிறான். அழகான பெண்ணைப் பார்த்ததும்
அவள் எனக்கு என்று ஆத்திரம் வரவில்லை.அசூசையால் கேலி வரவில்லை.
நான் இப்படி செய்ததில்லையே, கனவிலும் பிற மாதரை நினைத்ததில்லையே,
ஏன் , இன்று இவ்விதம் செய்கிறேன் என்று வருத்தப்படுகிறான். அதுவும் உடன்
பிறந்த தம்பியிடமே தன் உள்மனசு செய்ததை வெளியிட்டு விடுகிறான்.
அவன் பார்த்து தவித்த ஒரே பெண் சீதை. அவள்தான் அவனுக்கு மனைவி.
சீதையைப் பார்பதற்கு முன்னும் , சீதையை அடைந்த பின்னும் ராமனுக்கு
இந்த தவிப்பு வரவேயில்லை. ஒரு ஆணுக்கு உண்டான எல்லா கர்வமும்,
யோக்கியதையும் உள்ளவன் ராமன். பெண்கள் மீது அவனுக்கு இருக்கும்
மரியாதை இது. இது வலிந்து பெறப்பட்ட குணமில்லை. இயல்பு , இயல்பாகவே
பெண்களை மதித்தல் இருக்கிறது, ராமனிடம்.
என் மனம் கவர்ந்த , எழுத்துச் சித்தரின் எழுத்துக்களை
உங்களிடம் பகிந்து கொண்டேன் .

அழகான காட்சிப் பகிர்வுகள்..!
ReplyDelete