Wednesday, 7 May 2014


” அ ஞ் ச லை “


என் நண்பர்  ஒருவர், ஒரு குறும் படம் ( short film ) 
தயாரித்து,  " நாளைய  இயக்குனர் " என்ற போட்டிக்கு, 
 மதனின் பார்வைக்கு  அனுப்ப வேண்டும் ,
என்ற எண்ணத்தில்,  சில கதைகளை  என்னுடன் அலசிக் 
கொண்டிருந்த நேரத்தில், திரு. வை. கோபாலகிருஷ்ணன்   
அவர்களின் " அஞ்சலை " என்ற சிறு கதையை  படித்தேன் ! 

அதற்கான  இணைப்பு : 
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09.html

எங்களின் விவாதத்திற்கும் , அலசலுக்கும்  இந்த  கதையையும் 
எடுத்துக் கொண்டோம் !

இக்கதையில் எங்களுக்கு பிடித்திருந்த  KNOTS & characters 

கதவை தட்டிய  வேலைக்காரிசமீபத்தில்  கணவனை இழந்து
 கைக்குழந்தையுடன்  அல்லல் படுபவள் என்பது தெரிந்திருந்தும்,  நா ளை முதல்  செய்ய வேண்டிய  வேலைகளை  பட்டியலிடும்  
பணக்கார  முதலாளியம்மா !


குழந்தையை பத்தாயிரம்  ரூபாய்க்கு  விலைபேசி ,  சில பல நாட்கள் 
கெடு வைக்கும்   இடைத் தரகன் !

Five Star ஓட்டலில்  ரும்  போட்டு,   அதே குழந்தைக்கு  மூன்று  லட்சம் விலை பேசி,
ஒரு மணி நேரம்  கெடு  வைக்கும்    மனித   நேயமுள்ள புண்ணியவான் !!

இவர்களிடையே  சிக்கி,  பாசத்தை  தொலைக்கும்    பாமரப்  பெண் !


குறும் படம்  என்ற பார்வையில்  , பலவற்றை  VISUVAL  ஆக 
யோசிக்க வேண்டியிருந்தது . 
( மதனின்  கூரிய  பார்வையிலிருந்து  தப்பிக்க வேண்டுமே !  ) 

காட்சி  அமைப்பு 
வசனங்கள் -  sharp, leading  but  not misleading 
யதார்த்தம் - உதாரணத்திற்கு  மண் குடிசையைப் பற்றிய 
                            வர்ணனையும், பின் தொடர்ந்த  வாத்தியாரின் 
                            பாட்டும்.
 PRESENTATION  போன்ற  பலவற்றை  அலச வேண்டியிருந்தது ! 
                           
உண்மையில்,  இந்த கதையை  ஒரு குறும் படமாக  
யோசிக்க வைத்ததே , குடிசையைப் பற்றிய  வர்ணனைகள் தாம் !

எங்கள்  கற்பனையில்  ஓடிய  குறும் படத்தின்  முதல் காட்சி, 
குடிசைக்குள்  தொங்கும்  துளியும், அதில் தூங்கும்  
குழந்தையும்தான் !  அதை மையமாக வைத்து  சுற்றிவரும் 
கேமிராவின்  கண்களில் , கதாசிரியர்  வர்ணித்த  குடிசையும், 
பின் தொடரும் எம்.ஜி. ஆர்.  பாடலும்.,  
' தென்றல் வர மறுத்திடுமோ " என்ற  வரிகளின் முடிவில் 
 குடிசைக்கு வெளியே  புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்து நிற்கும் ,
சிவப்பு நிற  மாருதி  கார் ! 

இந்த  அலசலில்,  எங்களுக்குள்  எழுந்த  கேள்விகளும், 
பதில்களையும்  தொகுத்து ,  விமர்சனமாக  அனுப்பியிருந்தேன் !

அந்த  விமர்சனம் இதோ !

அஞ்சலை ---- விர்சம்

கதையின்  ஆரம்பமே  படோ டாபம்தான்.
தன் குடிசையிலிருந்து வெளியில் வந்து எட்டிப்பார்த்த அஞ்சலை
சிவகுருவை  வரவேற்கும் போது “சரிவந்துட்டீங்கவாங்க ! ' “ என்று 
முடிப்பது  சற்றே   இடறுகிறது. ( as if, it is a compulsion ) 

துணையின்றி  தனியே   வாழும்  ஒரு  பெண்தன்  வீட்டிற்கு  உறவினர்  
 அல்லாத  ஆடவர்  வரும்போது , அக்கம்பக்கத்தில்  இருப்பவரை  அழைத்து 
 அறிமுகம்  செய்வது   அல்லது  அங்கிருக்கும்  சிறுவர்களை  அழைத்து 
ஏதேனும்  வேலையிடுவது   போன்ற  நாசுக்கும்பண்பாடும்  இன்றும்   கீழ்தட்டு 
மக்களிடையே  உள்ளதுஇதை  தவித்திருப்பதும் ஒரு  இடறலே !

அஞ்சலையின்   மண் குடிசையைப் பற்றிய  அழகானஉயிரோட்டமான
வர்ணனை..   Superb.... 

பின்னூட்டமாக   வாத்தியாரின்  பாட்டு. வாவ் !

சிறுவர்கள்  சைக்கிள்  டயரை   வண்டியாக  ஒட்டியபடி   காரைச்  சுற்றி  
வருவதும்அதில்  சிலர்  காரைத்  தொட்டுப் பார்பதும்   படிப்படியாக  
நடக்கும்  விஷயங்கள்.  

அஞ்சலைசிவகுருவிடம்  தன்  கஷ்டங்களைக்  கூறும்போது
இடையிடையே  சிறுவர்களை  அதட்டுவது  போன்ற  அமைப்பு,  
மிகுந்த  யதார்த்தமாயிருந்திருக்கும்.

அஞ்சலையிடம்  எதைப்பற்றியோ   பேசவேண்டும்  என்ற  எண்ணத்துடன் 
வந்திருக்கும்   சிவகுருவிடம்  தடுமாற்றம்அது  என்னவாயிருக்கும் ?
Suspense  No 1 ?
அடுத்தது  சிவகுருவின்   Flashback.  
அஞ்சலையின்    அருமையும்,  
மல்லிகாவின்  ( சிவகுருவின் மனைவிஇயலாமையும்,
சிவகுருவின்  தேவையும்எதிபார்ப்பும்  .

ஊடே  ஒரு   suspense !  அந்த  எதிர்பாராத சம்பவம் எது ?

சிவகுருவிற்கு   அஞ்சலியை   ஒரு வருடமாகத்தான்  தெரியும்கணவன் 
 இறந்ததிலிருந்து  ஒரு மாத காலமாக  அஞ்சலை  வேலைக்கு  
செல்லவில்லை.   இப்போது  அஞ்சலைக்கு  8 மாத  கைக்குழந்தை.
நா   கணக்குல  கொஞ்சம்  வீக்குங்க !

அஞ்சலை  நிறைமாத  கர்ப்பிணியாய்  இருந்தபோதும்பிரசவம்  முடிந்த  
உடனேயும்   சிவகுருவின்  வீட்டில்  வேலை  பார்த்தாளாஅப்படியெனில்,
சிவகுரு மற்றும்  மல்லிகாவை   அரக்கத்தனமான  பணக்காரர்களாகத்தான்  
சித்தரிக்க முடியுமே   தவிர ,பாசமும், இரக்கமும் , மனித  நேயம் கொண்ட  
மனிதர்களாக  அல்ல.

மேலும்  அபத்தமானது  அஞ்சலைபகலில்   2.30  வரை   அத்திப்பூக்கள் 
நெடுந்தொடரைப்   பார்ப்பது

தான் பெற்ற குழந்தையை  நேசிக்கும்  அத்திப்பூக்கள்  கதா நாயகி   
' கற்பகத்தைஅஞ்சலைக்கு  மிகவும்  பிடிக்குமென்றால்,  
அவள்   தன்    குழந்தையை  (  குறைந்த பட்சம்  மதியம்  2.30 வரை  ) 
மறந்தது  ஏன்  ?  

அஞ்சலையின்  வேலைத் திறமை, நன்னம்பிக்கை   ஆகியவற்றுடன் அவளின் 
 தாய்மையின்  நெகிழ்வையும்  கோடிட்டு  காட்டியிருக்கவேண்டும்.

இப்பகுதி (2)  சிவகுருவின்  குடும்பத்திற்குவேலைகாரி  அஞ்சலையின்  
அத்தியாவசியத்   தேவையை  மட்டுமே குறிப்பிடுகிறது.

பகுதி 3 இல் ,  எதிர்பாராத, நடக்கக்கூடாத  சம்பவத்தைப பற்றி   நாசுக்காக
பட்டும் படாமலும்  பேசும்  சிவகுரு.

தன்  கணவனின்   மரணத்தை  (  காரணத்தைக் காட்டாமல்
போட்டு உடைக்கும்  அஞ்சலை.

சிவகுரு   அரக்கன்  அல்லநெஞ்சில்  ஈரம்  உள்ள  வள்ளல் என்று  காட்டி,  
தான்  வேலைக்கு  சென்றால்தன்  குழந்தையை  பார்த்துக் கொள்ள 
யாரும்  இல்லாத  வேதனையை  வெளிப்படுத்தியாரோ  ஒருவன் 
தன் குழந்தையை  விலை பேச வந்த  அவலத்தை  அஞ்சலை  வெளியிட,  
ஏன் பிறந்தாய் மகனே ...."”  என்ற  நேயரின்  விருப்பம்

இல்லையொரு .... பிள்ளையென்று ...
ஏங்குவோர் பலரிருக்க ... இங்கு வந்து ஏன் பிறந்தாய்.... “ 
என்று   மனம்  குமுறும்  சிவகுரு.

! !...   இதுதான்  Suspense No 1  ?

ஆமாம்வேலைக்காரி   ஏழை என்றால்அவள்   கணவன்  குடிகாரனாய்த்தான்  
இருக்க வேண்டுமா ? எழுதப்படாத  சட்டம்  போலிருக்கிறது .

குழந்தையுடன்   கொஞ்சுதலும், விளையாடுவதும்  சகஜமானசாதாரணமானயதார்த்தமான  விஷயம்தான்.   
"  போகுமிடம்  வெகு தூரமில்லைநீ  வாராய் "     என்ற நினைப்புடன்  அஞ்சலியையும்  குழந்தையையும்   காரில்  கூட்டிச் செல்வதுஊராரின்  வாய்க்கு  அவல் .

இந்த  அவலுக்காகத்தான் , பண்பாடும், நாசுக்கும்  அஞ்சலைக்கு    மறந்து போனதோ ?

 ஐந்து  நட்சத்திர  ஓட்டல்த்ரீ   பெட்  .சி   ரூம்கும்மென்ற   மெத்தையும்  
தலையணைகளும்வயிறார   உண்ண   வகைவகையான  உணவுகள்
" மயங்குகிறாள்  ஒரு  மாது ""   


 சிவகுரு  என்ன  அப்படி  மனம் திறந்து  பேசினார்  என்பதை மறைத்து
ஒருமணி  நேர  கெடுவிற்குள்  முடிவு சொல்ல வேண்டும்  என்ற                 
நிர்பந்தத்தை  உருவாக்கி  , பணமா  பாசமா  என்று  அஞ்சலை  குழம்பும் அளவிற்கு
அவளுடைய  எண்ணங்களை          ( ”வசதி வாய்ப்புள்ள சிவகுரு ஐயாவுக்கு,    
 நீ இல்லாவிட்டால்    உன்னைப்போலவே     10 அஞ்சலைகள் கிடைக்கக்கூடும்.
ஆனால் நீ நினைத்தாலும் இவரைப்போன்ற  இன்னொரு சிவகுருவைக்காணவே
முடியாது) கொட்டியிருப்பது  ஒரு தவறான  எண்ணத்தையே  உருவாக்குகிறது.

தத்து  எடுத்த  குழந்தையை  தங்கத்தில்  சீராட்டி,   
தயவுசெய்து நீயும் இனிமேல் இதை நம் குழந்தையாகவே
ஏற்றுக்கொள்ளணும்."    என்று மனைவியை  வேண்டுவதும்  
என்னவோ  போல் இருக்கிறது.  

லட்சத்திற்கு  எத்தனை  சைபர்  என்று  எண்ணுவது  பாமரத்தனம்தான்
ஆனால்  இது  எங்கேயோ  "   சங்கமம் "   ஆகிறதே !


மாதம்  2500.  வருடத்திற்கு  30 ஆயிரம்.    இதற்கு  பான்  ( PAN ) card  தேவையா?

முடிவாக,  
கதவை தட்டியது    வேலைக்காரி, சமீபத்தில்  கணவனை இழந்து கைக்குழந்தையுடன்  அல்லல் படுபவள் என்பது தெரிந்திருந்தும்,       நாளை முதல்      செய்ய வேண்டிய  வேலைகளை  பட்டியலிடும்  பணக்கார  முதலாளியம்மா !


குழந்தையை பத்தாயிரம்  ரூபாய்க்கு  விலைபேசிசில பல நாட்கள் கெடு வைக்கும் 
 இடைத் தரகன் !

Five Star ஓட்டலில்  ரும்  போட்டு,   அதே குழந்தைக்கு  மூன்று  லட்சம் விலை பேசி,
ஒரு மணி நேரம்  கெடு  வைக்கும்    மனித   நேயமுள்ள புண்ணியவான் !!

இவர்களிடையே  சிக்கிபாசத்தை  தொலைக்கும்    பாமரப்  பெண் !

"   செத்தும்   கொடுத்த  சீதக்காதி "    போல்தாய்க்கு  சீர்   கொடுக்கும்
சின்னக்  கண்ணன்

 இன்று இருக்கும் நிலைமையில் ஒன்றைப்பெற வேண்டுமானால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும்; வேறு வழியில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டாலும், அஞ்சலையின் நெஞ்சம்   மறக்கவில்லை, அது  தன்  நினைவை  இழக்கவில்லைஅவளும்  இரவெல்லாம்  கண்  மூடவில்லை

 இன்றைய  சீர் குலைந்த  சமுதாயத்தின்   நிலைப்பாடுதான்இந்த  தங்க முலாம்
பூசிய  மனித நேயம்.

 இவ்வாறு   பல  இழைகளைக் கொண்டு   அழகான கம்பளம்  நெய்த  நெசவாளர் ( கதாசிரியர் )   மனதில்  தோன்றிய  கழிவிரக்கத்தின்  எதிரொலிதான் , அஞ்சலையின்  வாழ்வில்  மூடிய   இருள்  அகலுமா ?    விடியல் வருமா  ?  என்ற கேள்விகள்.  

 நம்பினார்  கெடுவதில்லை இது மட்டுமல்ல,
நான் என்பதையும், எனது  என்பதையும்  விட்டுக் )
கொடுப்பவர்களும்   கெடுவதில்லை. இது  நான்கு மறை  தீர்ப்பு .
அஞ்சலைக்கு   இருள்  அகலும் ;
கோழியும்  கூவும்:
விடியலும்  வரும்.  

G. Perumal chettiar


No comments:

Post a Comment