" நீ முன்னாலே போனா ,
நா பின்னாலே வாரேன் ... " ( VGK 14 )
திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால்.
விமர்சனப் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட கதை ,
அவர் எழுதிய ,
" நீ முன்னாலே போனா. நா... பின்னாலே வாரேன் .. "
அதற்கான இணைப்பு :
http://gopu1949.blogspot.in/
80 வயதைக் கடந்த பெரியவரை , அவரது மகனே முதியவர் இல்லத்தில் விட்டுச் செல்லும் நிகழ்ச்சி .
தன் மனைவி இறந்த பதினைந்தாவது நாளில் முதியோர் இல்லத்திற்கு வரும் பெரியவரின் மேல் உள்ள குற்றச் சாட்டு, அவரின் மனைவியின் இறப்பிற்கு அவர்தான் காரணம். குற்றமும், குறையும் கூறியவர்கள், அவர் பெற்றெடுத்த மக்கள்.
வசதியாக வாழ்ந்த பெரியவர் , தன் மனைவிமேல் மிகுந்த பற்றுடையவராகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து , விருப்பமுடன் வாழ்ந்திருந்த அவர்களின் வாழ்க்கையில் குறுக்கிட்டது சர்க்கரை நோய். விரும்பியதை உண்ண முடியாத நிலை. நோயின் தாக்கமும், உணவுக் கட்டுப்பாடுகளும் , அவர்களுக்கு தாம் விரும்பிய உணவுப் பொருட்களின் மேல் , தீராத ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சூழ் நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவு " இறப்பதற்கு முன் தாம்
விரும்பிய அனைத்துப் பொருட்களையும் உண்ண வேண்டும் "
இறந்தவர்களுக்காகசெய்யப்படும் ,சிரார்த்தங்களிலோ ,திதிகளிலோ அவர்களுக்குப்
பிடித்தமானவற்றைப் படைப்பதுதானே இன்றைய வழக்கமாய் இருக்கின்றது .
அப்போது , என்னுள் தோன்றிய கருத்து , " உயிருடன் இருக்கும்போது
கொடுக்கமறுத்த உணவு வகைகளை, ஏன் படைக்க வேண்டும் ? "
போர்க்களத்தில், எதிரியின் மரணத்தை பார்க்கும்,
படை வீரனின் மன நிலை வேறு .
மரணத்துடன் போராடும் தன் தாயைப் பார்க்கும்,
மகனின் மன நிலை வேறு .
சுமார் 50 வருடங்களுக்கு மேல் தன்னுடன் வாழ்ந்த ,
தான் மிகவும் அன்பு செலுத்திய மனைவியின் மரணத்தை
பார்க்கும் , கணவனின் மன நிலை வேறு . இது , தன்னில்
மறு பாதியாக வாழ்ந்தவளின் மரணம்.
வரையறுக்கப்பட்ட நிலையில், மனைவி விரும்பிய
உணவு பொருட்களை கொடுத்த பெரியவரை குறை சொல்ல
முடியவில்லை என்னால்.
தனி மரம் தோப்பாகாது , நான் யாரை சாட்சிக்கு அழைப்பது ?
யோசித்தேன் !
கீதை ! ... இல்லை .. குருஷேத்திரத்தில் நடந்தது , போராளிகளின்
மரணம்.
"பளிச்" என்று தோன்றியது, " மாதரி ".
பெண் வேட்கை , கணவனைக் கொல்லும் என்று தெரிந்திருந்தும் ,
கணவனின் ஆசைக்கு உடன்பட்டவள். மாதரியை யாராவது குறை
கூறியிருக்கிறார்களா என்றும் யோசித்தேன். மாதரியை குறை
கூறக் கூடிய தகுதி வாய்ந்த ஒரே பாத்திரம் தருமன். அவனுக்கும்
ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது, வன வாசத்தின் போது . அப்போதும் தருமன்
தன் நிலை பிறழவில்லை.
என் எண்ணங்களை கோர்வைப் படுத்தி, கூறை கூறிய ,
பெரியவர் பெற்ற செல்வங்களை முன்னிலைப் படுத்தி,
ஒரு மேடைப் பேச்சாக விமர்சனத்தை எழுதினேன்.
என் எண்ணங்களும், கருத்துக்களும் ஏற்கப்பட்ட நிலையில்,
என் எழுத்துக்கள் இரண்டாம் பரிசை பெற்றிருக்கிறது .
என்னை எழுதத் தூண்டிய திரு. வை. கோபாலகிருஷ்ணன்
அவர்களுக்கும், என் கருத்துக்களையும் அங்கீகரித்து
என்னை பரிசுக்கு உரியவனாக்கிய நடுவர் அவர்களுக்கும் ,
என் மனமார்ந்த நன்றிகள் ..
அதற்கான இணைப்பு :
http://gopu1949.blogspot.in/
பரிசு பெற்ற என் கருத்துக்கள் , இதோ !
0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-
இடம் : இணைய தளத்தின் கருத்தரங்கம் .
இன்றைய தலைப்பு: " நீ முன்னாலே போனா
நா பின்னாலே வாரேன் ... "
என்ற திரு. VGK அவர்களின் சிறு கதையும்
அதில் உள்ள நிகழ்வுகளும்.
குழுமியிருப்போர் : திரு. நடுவர் அவர்களும்,
படைப்பாளி திரு. VGK அவர்களும்.
விமரிசக வித்தகர்களும்,
வாசகர்களும், மற்றும் கதையில் பங்கேற்ற
சில, பல கதா பாத்திரங்களும்.
குழுமியிருக்கும் அனைவருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு என் கருத்துக்களை பகர்கின்றேன் !
இதற்கு முந்தைய படைப்பில், வாசகர்கள் அனைவரையும் வயிறு குலுங்க
சிரிக்க வைத்து, ஊடே சிந்திக்கவும் வைத்து, சாதனை புரிந்த கதாசிரியர் , அடுத்ததாக, வாசகர்களின் நெஞ்சை உலுக்கி, மிகவும் கனக்க வைத்த, அற்புதமான காவியத்தைப் படைத்து, மற்றுமொரு சாதனை புரிந்திருக்கிறார் ! ! அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
" தந்தை தாய் பேண் " என்ற மூதாட்டியின் மூதுரையை , அனைவருக்கும்
நினைவுறுத்தும் வகையில், இக்காவியத்தை ஒரு முதியோர் இல்லத்தில்
தொடங்கி, தனயனே தந்தையை முதியோர் இல்லத்தில் விட்டு செல்வது போன்றதொரு காட்சியை அமைத்த நேர்த்தியை பாராட்டுகின்றேன் !
ஒரு படை வீரனின் கடமை, " நாட்டைக் காக்க போர்களத்தில் போராடுவது மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கும் தக்க தருணத்தில் உதவுவதும்கூட " என்ற கருத்தினை வலியுறுத்தும் வகையில்,
' பெரியவரை ' ராணுவத்தைச் சார்ந்த ஒரு அதிகாரியாக படைத்து, முதியோர் இல்லத்தில் சேர்ந்த மறு நாளே, ஒரு நோயாளிக்கு முதல் சிகிச்சை அளிக்கும் மனித நேயமுள்ள ஒரு கண்ணியவானாக காட்டியிருக்கும் அழகை, ஆராதிக்கிறேன் !
ஒளிரும் விளக்கை வாழ்க்கைக்கும், எண்ணெயையும், திரியையும் கணவன், மனைவிக்கும் உவமையிட்டு , இதில் எது முந்தினாலும், மற்றவரின் வாழ்க்கையில் ஒளி மறைந்து போகும் என்ற யதார்த்தத்தை , // எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள்.// என்ற பெரியவரின் வார்த்தைகளால் கோடிட்டு காட்டிய விதத்தை
பாராட்டுகின்றேன் !
கண்டிப்புடன் இருந்ததினால் . பெற்ற பிள்ளைகளும் பெரியவரை
விட்டு சற்றே விலகியிருக்க,
அதை ஒரு குறையாக காட்டாமல்,
அதை ஒரு குறையாக காட்டாமல்,
பெரியவரின் மனைவி, தன் பிள்ளைகளை நேசித்ததையும்,
மருமகள்களை, பெற்ற பெண்களைப்போல் சீராட்டியதையும்,
மருமகனை கொண்டாடியதையும் விவரித்த விதத்தில் ,
மனைவிக்கு கிடைத்த புகழாரமெல்லாம் தனக்கும்
கிடைக்கவில்லையே என்ற பெரியவரின் ஏக்கம் தொனித்தாலும்,
கிடைக்கவில்லையே என்ற பெரியவரின் ஏக்கம் தொனித்தாலும்,
////// அனைவரையும் அரவணைத்துச் சென்று , அன்பு செலுத்தி ,
அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவது என்பது என் மனைவிக்கு
மட்டுமே வாய்ந்த கை வந்த கலை ! //////
என்ற பெரியவரின் பெருமிதம் வாய்ந்த சொற்களால்,
எல்லா புகழாரங்களும், அவளை மணம் புரிந்து, அவளின்
சரிபாதியாக நின்ற பெரியவருக்கும் உரியதே என்றதொரு
எண்ணம் தொக்கி நிற்குமாறு அமைத்த விதம் , மிக மிக அருமை !
நல்ல, சுவையான உணவுகளை உண்ணவேண்டும் என்ற சராசரி
மனிதனின் ஆசைகளை விவரிப்பதற்காக , பல சுவையான உணவு வகைகளையும் ,
பழரச வகைகளையும் பட்டியலிட்டு , அவைகளை தயாரிக்கும் முறை,
பக்குவப் படுத்தும் முறை ஆகியவற்றையும் விவரமாக விளக்கிய விதம் அருமை !
பழரச வகைகளையும் பட்டியலிட்டு , அவைகளை தயாரிக்கும் முறை,
பக்குவப் படுத்தும் முறை ஆகியவற்றையும் விவரமாக விளக்கிய விதம் அருமை !
அதே மனிதனுக்கு வசதிகள் இருந்தும், வாய்ப்புக்கள் இருந்தும்,
நோய்களின் தாக்கத்தால், அத்தகைய உணவுகளை புறக்கணித்தே
ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவனை ஆட்படுத்தப்படும்போது,
அம்மனிதனின் ஏக்கங்களையும், மன ஓட்டங்களையும்
விவரித்த் விதமும்... மிகமிக அருமை !
கதையின் ஊடே,
தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்த ஒரே மனிதன் பரிஷித்துவின் கதையை இணைத்து , அவன் தன் கடைசி ஏழு நாட்களை பாகவதத்தை கேட்பதில் செலவிட்டு , ஏழாம் நாள் உயிர் நீத்ததை விவரித்துவிட்டு, அதேபோல் பெரியவரும் பாகவதத்தை ஏழு நாட்கள் கேட்டு ரசித்து , ஏழாம் நாள் இறுதியில் உயிர் நீத்ததை விவரித்த விதம் அனைத்து வாசகர்களின் நெஞ்சத்தையும் உலுக்கிவிட்டது !
வாசகர்களின் கலங்கிய கண்களின் ஓரத்தில் துளிர்த்த,
ஒவ்வொரு சிறு துளி கண்ணீரும் பறை சாற்றும் ,
இந்த படைப்பாளியின் சாதனையை !
தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்த ஒரே மனிதன் பரிஷித்துவின் கதையை இணைத்து , அவன் தன் கடைசி ஏழு நாட்களை பாகவதத்தை கேட்பதில் செலவிட்டு , ஏழாம் நாள் உயிர் நீத்ததை விவரித்துவிட்டு, அதேபோல் பெரியவரும் பாகவதத்தை ஏழு நாட்கள் கேட்டு ரசித்து , ஏழாம் நாள் இறுதியில் உயிர் நீத்ததை விவரித்த விதம் அனைத்து வாசகர்களின் நெஞ்சத்தையும் உலுக்கிவிட்டது !
வாசகர்களின் கலங்கிய கண்களின் ஓரத்தில் துளிர்த்த,
ஒவ்வொரு சிறு துளி கண்ணீரும் பறை சாற்றும் ,
இந்த படைப்பாளியின் சாதனையை !
இதற்கொரு மருந்தைக் கண்டேனா ?
இருந்தால் அவளை தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா ?
என்ற பாடலின் வரிகள் படைப்பாளியின் மனதில் ஆழ்ந்த
சலனத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் ! அதன் எதிரொலிதான்,
பெரியவர் தன் சொத்தை , மருந்துகளின் ஆராய்ச்சிற்காக
எழுதி வைத்திருப்பது . இதன் நோக்கம் , படைக்கப்பட்ட
கதா பாத்திரத்தின் ஏக்கத்தையும் , எண்ணங்களையும் மேன்மைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டதுபோல் இருந்தாலும்,
படைப்பாளியின் இந்த கருத்து
சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று !
வரவேற்கப்பட வேண்டிய ஒன்று !
வாழ்த்தப்பட வேண்டிய ஒன்று !
இந்த காவியத்தில் அமைக்கப்பட்ட காட்சிகளை நிகழ்வுகளாகக்
கொண்டு , அதில் பங்கேற்ற சில கதா பாத்திரங்களுக்கு சிலவற்றை
கூற விழைகின்றேன் !
முதன் முதலாக,
பெரியவர் முதியோர் இல்லத்தில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்து,
அவரின் இறுதி மூச்சு வரை அவரை தொடர்ந்து, கண்காணித்து, அவரைப்
பற்றிய விவரங்களை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய
திரு. " அரட்டை" ராமசாமி அவர்கள் !
அரட்டை அரங்கத்தில் கலந்து கொள்ள ஆசைப்பட்டு, வாய்ப்பு கிடைக்காததால் " அரட்டை " என்ற பட்டப் பெயருடன் வலம் வரும்
திரு. ராமசாமி அவர்கள் !
அந்த அரட்டை அரங்கம், வீணே கதை பேசி காலத்தை கழித்த
அரங்கமல்ல ! தமிழகத்தின் சீரிய சிந்தனையாளர்களை, நல்ல உள்ளங்களை, சாதனையாளர்களை, திறமைசாலிகளை, விடா முயற்சி
கொண்டு உயர்ந்த உத்தமர்களை, உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய அரங்கம் !
" அந்த அரங்கம் வாய்ப்பு கொடுக்காவிட்டால் என்ன ?
நான் தருகிறேன் மற்றுமொரு சந்தர்ப்பம் !
இதோ ஒரு மா மனிதன் !
இவனை , இனம் பிரித்து காட்டு "
என்று இறைவன் கொடுத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி,
பெரியவருடன் பேசி, ஒரு துப்பறிவாளனைப்போல் அவருடைய
உடைமைகளை ஆராய்ந்து, அவரைப் பற்றிய உண்மைகளையும்,
எண்ணங்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு,
ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் !
ஒரு வேளை, " இந்த பெரியவரும், நம்மைப் போன்ற , பிள்ளைகளால்
கை விடப்பட்ட மற்றொருவர் " என்று எண்ணி, நீங்கள் வாளாது இருந்திருந்தால் , அவரைப் பற்றிய உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கும்.
மகா பாரதத்தில் , பதினெட்டு நாள் போர்களையும் திருதராஷ்டிரனுக்காக நேர்முக வர்ணனை செய்த சஞ்சயனைப் போல் , பெரியவர், முதியோர் இல்லத்தில் இருந்த
அனைத்து நாட்களிலும், அவரைப் பற்றிய செய்திகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !
பாகவதம் முடிந்த ஏழாம் நாள் , தன் அறையில் அமர்ந்திருந்த பெரியவர், மடிமேல் தன் மனைவியின் போட்டோவை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு சொட்டாக ஊற்றி , " குடி குடி " என்று சொல்லிய விதத்தில், பெரியவர் தன் மனைவிமேல் கொண்ட
பாசத்தையும், நேசத்தையும், பரிவையும் , காதலையும், நேரில் கண்டு அதிர்ந்து,
அதன் பின்னர், சில மணி நேரத்தில் உயிர் நீத்த பெரியவரின் மரணத்தையும் நேரில்
கண்டு கலங்கி. மூன்று நாட்கள் மௌனம் காத்த உத்தமரே !
உங்களுக்கு ஆறுதல் சொல்ல, வார்த்தைகள் இல்லை என்னிடம் !
ஆயினும், ஒன்று சொல்வேன் !
" நல்லாரைக் காண்பதுவும் நன்றே " என்றாள் அந்த மூதாட்டி ..!
நீங்கள் இந்த நல்லவரை கண்டதுமட்டுமல்ல.......
அவருடன் பேசியும், பழகியும் .......
புண்ணியம் செய்தவர் ஐயா நீங்கள் ! !
அடுத்ததாக,
பெரியவர் பெற்றெடுத்த பெருஞ்செல்வங்களே !
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் " என்பார்கள்.
உங்கள் தாய், உங்களைக் கொண்டாடி மகிழ்ந்தது ,
நீங்கள் கொண்டவர்களையும் கொண்டாடியது அனைத்தும் ,
அவரைக் கொண்டவன்,
அவரை கொண்டாடியதால் அல்லவா ?
உங்கள் தாயின் மறைவு, உங்களை மிகவும் பாதித்திருக்கிறது
என்பதனை நான் நீக்கமற அறிவேன் !
மரணத்தை முன்னரே அறிந்தவர் எவருமிலர், ஒருவனைத் தவிர.
அதனை அறிந்த ஒரே ஒருவன் , பரிஷித்துவின் கதை, உங்களுக்கு
தெரியும்.
நீங்கள் மறந்த,
ஆனால் ,
உங்களைப் பெற்றவர்களின் மனதில் ஓடிய,
மற்றொரு கதையை, உங்களுக்கு நினைவூட்டுகிறேன் !
மகா பாரதத்தில்,
மான் உருவம் கொண்டு போகித்திருக்கும் முனிவனை,
மானெனக் கருதி கொன்றதனால்,
" போகிக்கும் போது மரணம் " என்ற சாபத்தைப் பெற்றவன்,
பாண்டு.
இதனால் , மந்திரத்தை உபயோகித்து மக்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்
என்று குந்தியையும், மாதரியையும் நிர்பந்தித்து, மக்களைப் பெற்ற பின்,
பெண் வேட்கைக்கு ஆளாகிறான், பாண்டு.
( பாண்டுவின் இரண்டாவது மனைவியை " மாத்தரி" என்று வில்லிபுத்தூராரும்,
" மாத்ரி " என்று மற்றவரும் குறிப்பிட்டுள்ளனர், நான், சில உபன்யாசங்களில் கேட்டுப் பழகிய
" மாதரி " என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறேன், பிழையிருப்பின் மன்னிக்கவும் )
கொண்டவனின் வேட்கையை தணிக்க,
மாதரியும் உடன்படுகிறாள்.
அவளுக்கு தெரியாதா, பெண் வேட்கை,
கொண்டவனைக் கொல்லும் என்று ?
தெரிந்தும் சம்மதிக்கிறாள் !
பாண்டு மரிக்க, உடன்கட்டையேறுகிறாள், மாதரி !
குந்தியோ அல்லது மற்றவர்களோ தன்னை தூற்றுவார்களோ என்ற எண்ணம் மனதில் தோன்றினாலும், கணவனின் விருப்பத்தை பூர்த்தி செய்வதே தன் கடமை என்று எண்ணி, அச்செயலின் பலனை எதிர்பாராமலும், பொருட்படுத்தாமலும், மனைவியாக தன் கடமையை செய்த மாதரி , இந்நிகழ்விற்கு பல ஆண்டுகளுக்குப் பின் , குருஷேத்திரத்தில்
" கடமையைச் செய் , பலனை எதிர்பாராமல் " என்ற கண்ணனின் கீதைக்கு, வித்திடுகிறாள் .
யாரும் இல்லை.
தருமனுக்கு தெரியாதா , தன் தந்தையின்
மரணமும், அதன் காரணமும்.?
என்றும் குறை கூறியதில்லை,
தன் சிற்றன்னையைப் பற்றி !
வனவாசத்தின் போது, நச்சு நீர் அருந்தி, தம்பியர் நால்வரும் வீழ்ந்து
கிடக்க, யட்சனாய் வந்த தர்ம தேவதைக்கு சரியான பதிலளித்த
தருமனுக்கு கிடைத்த பரிசு, " தம்பியர் நால்வரில், ஒருவனை மட்டும்
உயிர்பித்துக்கொள் " என்று.
தருமன் நகுலனைத் தேர்ந்தெடுக்க. ,காரணம் கேட்டது, தரும தேவதை.
" குந்திக்கு நானிருக்கிறேன் , மாதரிக்கு நகுலன் வேண்டும் "
என்று பதிலளித்த தர்மவான், தருமன்.
எந்நிலையிலும், தன் நிலை பிறழாத தருமன் , என்றும் பேதம்
பார்த்ததில்லை , தன் அன்னைக்கும், சிற்றன்னைக்கும் !
அத்தகைய தருமன் போற்றிய , மாதரி வழி நின்ற கர்ம வீரன் ,
உங்கள் தந்தை!
அன்றைய குருஷேத்திரத்தில், மரணத்தை எண்ணிக் கலங்கிடும்
வீரனாக சித்தரிக்கப்பட்டவன் , விஜயன் .
இன்றைய நிகழ்விலே, மரணத்தை எண்ணி கலங்கிடாமல்,
தருமன் போற்றிய மாதரி வழி நின்ற , மா வீரனாக
வடிவமைக்கப் பட்டிருக்கிறார், உங்கள் தந்தை !
" மரணத்தை எண்ணி கலங்காதே ! போர் செய், போர் செய் ! "
என்று விஜயனை எழுச்சியுறச் செய்த,
கண்ணனின் மனதும் கல் மனதல்ல!
உங்கள் தாயின் ஆயுள்,
நான்கு நாட்கள்தான் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,
தாயினும் சாலப் பரிந்து ,
தன் மனைவியின் விருப்பங்களையும் ஆசைகளையும்
மாதரி வழி நின்று பூர்த்தி செய்த ,
உங்கள் தந்தையும், இரக்கமற்ற அரக்கனுமல்ல !
நான்கு நாட்கள்தான் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,
தாயினும் சாலப் பரிந்து ,
தன் மனைவியின் விருப்பங்களையும் ஆசைகளையும்
மாதரி வழி நின்று பூர்த்தி செய்த ,
உங்கள் தந்தையும், இரக்கமற்ற அரக்கனுமல்ல !
உங்களுக்கு தெரியுமா, இந்த நிகழ்வு,
அந்த அன்புள்ளங்களின் ஆத்மார்தமான ஒப்பந்தம் என்று ?
அந்த அன்புள்ளங்களின் ஆத்மார்தமான ஒப்பந்தம் என்று ?
என்று உங்கள் தாய்க்கு சர்க்கரை நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு ,
உணவு முறைகள் வரையறுக்கப்பட்டதோ, அன்றே அவர்கள் எடுத்த முடிவு , " இறப்பதற்குமுன், தாம் விரும்பிய அனைத்தையும் உண்டு மகிழ்ந்துவிட வேண்டும் " என்பதுதான் !
மனைவி விரும்பிய பொருட்களை, கைகள் கனிவுடன் நீட்டினாலும்,
மனது எப்படி துடித்திருக்கும், அந்த பெரியவருக்கு ?
மனது எப்படி துடித்திருக்கும், அந்த பெரியவருக்கு ?
அவரால் வாய் திறந்துதான் சொல்லியிருக்க முடியுமா,
" கண்மணியே ! நீ காற்றில் கரையப் போகிறாய்,
பிரியமானவளே !, நீ என்னைவிட்டு பிரியப் போகிறாய் " என்று ?.
அல்லது, உங்கள் தாயார்தான் கேட்டிருப்பார்களா
" மறுக்கப்பட்டவைகள் ஏன் அளிக்கப்பட்டன " என்று ? .
இரு விழிகள் கணை தொடுக்க,
மற்ற இரு விழிகள் உரைத்திருக்கும், அந்த முடிவுரையை !
கண்கள் கலங்கினாலும், ஒரு துளி கண்ணீரைச் சிந்தினாலும்,
நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் என்று கண்ணீரையும்
கட்டிப் போட்ட உத்தமன், உங்கள் தந்தை !
அவரையா குறை கூறுகிறீர்கள், தாயை கொன்றவர் என்று ......?
ஒரு வேளை, உங்கள் தந்தை முந்தியிருந்தால்,
உங்கள் தாயாரும் செய்திருப்பார் இதே செயல்களை, மன நிறைவுடன் !
உங்கள் தாயாரும் செய்திருப்பார் இதே செயல்களை, மன நிறைவுடன் !
அப்போது , குறை கூறியிருப்பீர்களா உங்கள் தாயை ?
உங்கள் தாயுடன் நீங்கள் கொண்டிருந்த நெருக்கம் , குறை சொல்ல விடாது !
உங்கள் தந்தை , கண்டிப்புடன் இருந்ததினால், சற்று விலகியே
நின்றுவிட்டிர்கள் !
மற்றொரு உண்மை தெரியுமா உங்களுக்கு ?
உங்களிடம் கண்டிப்பாக இருந்த பெரியவர்,
உங்களைக் கொண்டாடும் சுதந்திரத்தை ,
உங்கள் தாய்க்கு கொடுத்ததின் காரணமென்ன?
உங்களிடம் கண்டிப்பாக இருந்த பெரியவர்,
உங்களைக் கொண்டாடும் சுதந்திரத்தை ,
உங்கள் தாய்க்கு கொடுத்ததின் காரணமென்ன?
" நான் கண்டிப்புடன் இருக்கிறேன்,
நீ கண்ணின் கருமணியைப் போல் கருதி, காப்பாற்று"
என்ற நிலைப்பாடுடன் வாழ்ந்தவர்கள், உங்களைப் பெற்றவர்கள் !
நீ கண்ணின் கருமணியைப் போல் கருதி, காப்பாற்று"
என்ற நிலைப்பாடுடன் வாழ்ந்தவர்கள், உங்களைப் பெற்றவர்கள் !
உங்களின் இன்றைய சிறப்பான நிலைமைக்கு, தந்தையின் கண்டிப்பும்,
தாயின் பாசமும், பரிவும் அல்லவா காரணங்கள் !
தவறு , செல்லங்களே !
தவறு !
நீங்கள், உங்கள் தந்தைமேல் கொண்ட பார்வை , தவறு !
தாயை உங்களிடமிருந்து பிரித்துவிட்டார் என்ற தவறான பார்வையினால்,
நீங்கள் அவருக்கு கொடுத்த தண்டனை, உங்களை அவர் பிரிந்திருப்பது !
" தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை " என்பதை உணைந்த நீவிர் ,
" சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் " என்பதனை மறந்ததும் ஏனோ ?
" பெற்றவர்க்கு இல்லை குற்றமும் சினமும் " என்ற மூதாட்டியின்
மூதுரைப்படி , நீங்கள் கொடுத்த தண்டனையையும் புன்சிரிப்புடன்
ஏற்றுக் கொண்ட பெருந்தன்மையாளன் , அவர் !
குறை ஒன்று சொன்னால், உங்களின் சீரான வாழ்க்கையில்
சுருக்கங்கள் வந்துவிடுமோ அன்று அஞ்சி, எதையும்
நிறைவாகவே கொண்ட உத்தமன் , உங்கள் தந்தை !
" யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்பதற்கு மறு மொழியாக
" நான் பெற்ற துன்பம், இனி எவருக்கும் வேண்டாம் " என்ற
நினைவுடன், தன் மரணத்திலும் பிறர் நலம் காண நினைத்த நல்லவர்,
உங்கள் தந்தை !
நாளை, அவர் கனவு மெய்ப்படும்போது, அவர் வாழ்க்கை
காவியமாகும் !
அவரைப் பற்றிய எழுத்துக்களும் காவியமாகும் !
போற்றுங்கள் !
உங்கள் தாய்க்கு,
தாயுமானவனாய் நின்ற உங்கள் தந்தையை
போற்றுங்கள் !
மனைவிக்கு,
மருத்துவனாய் நின்று சேவை செய்த
மா மனிதனைப் போற்றுங்கள் !
நாட்டு மக்களும்
நலம் காண வழி வகுத்த
நல்லவனை போற்றுங்கள் !
இறுதியாக.
பெரியவரின் " நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க " என்று வாழ்த்தி,
வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் !
0-0-0-0-0-0-0-0-0-0-0-0-
தாயின் பாசமும், பரிவும் அல்லவா காரணங்கள் !
தவறு , செல்லங்களே !
தவறு !
நீங்கள், உங்கள் தந்தைமேல் கொண்ட பார்வை , தவறு !
தாயை உங்களிடமிருந்து பிரித்துவிட்டார் என்ற தவறான பார்வையினால்,
நீங்கள் அவருக்கு கொடுத்த தண்டனை, உங்களை அவர் பிரிந்திருப்பது !
" தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை " என்பதை உணைந்த நீவிர் ,
" சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் " என்பதனை மறந்ததும் ஏனோ ?
" பெற்றவர்க்கு இல்லை குற்றமும் சினமும் " என்ற மூதாட்டியின்
மூதுரைப்படி , நீங்கள் கொடுத்த தண்டனையையும் புன்சிரிப்புடன்
ஏற்றுக் கொண்ட பெருந்தன்மையாளன் , அவர் !
குறை ஒன்று சொன்னால், உங்களின் சீரான வாழ்க்கையில்
சுருக்கங்கள் வந்துவிடுமோ அன்று அஞ்சி, எதையும்
நிறைவாகவே கொண்ட உத்தமன் , உங்கள் தந்தை !
" யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்பதற்கு மறு மொழியாக
" நான் பெற்ற துன்பம், இனி எவருக்கும் வேண்டாம் " என்ற
நினைவுடன், தன் மரணத்திலும் பிறர் நலம் காண நினைத்த நல்லவர்,
உங்கள் தந்தை !
நாளை, அவர் கனவு மெய்ப்படும்போது, அவர் வாழ்க்கை
காவியமாகும் !
அவரைப் பற்றிய எழுத்துக்களும் காவியமாகும் !
போற்றுங்கள் !
உங்கள் தாய்க்கு,
தாயுமானவனாய் நின்ற உங்கள் தந்தையை
போற்றுங்கள் !
மனைவிக்கு,
மருத்துவனாய் நின்று சேவை செய்த
மா மனிதனைப் போற்றுங்கள் !
நாட்டு மக்களும்
நலம் காண வழி வகுத்த
நல்லவனை போற்றுங்கள் !
இறுதியாக.
பெரியவரின் " நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க " என்று வாழ்த்தி,
வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் !
0-0-0-0-0-0-0-0-0-0-0-0-
விமரிசையான விமர்சனம் ஐயா..
ReplyDeleteபரிசு பெற்றதற்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!