Wednesday, 7 May 2014


மறக்க மனம் கூடுதில்லையே !


திரு. வை. கோபாலகிருஷ்ணன்  அவர்களால் 
பரிசுப் போட்டிக்காக  வைக்கப்பட்ட  கதை, 
மறக்க மனம் கூடுதில்லையே !

அதற்கான  இணைப்பு : 



தன் இளமைப் பருவத்தில், 
படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் ,
சந்திக்கும்  இரு பெண்களை, 
மறுபடியும்  வெவ்வெறு சமயத்தில், 
வெவ்வேறு நிலைகளில்  காணும்  கதாநாயகனின் 
மன ஓட்டங்களை  பிரதிபலிக்கும், கதை !  

ஒரு சினிமா  பாடல் வரிகளை, 
தலைப்பாக கொண்டிருந்ததினாலோ என்னவோ,  
இந்த கதையை படிக்கும்போதே , 
சில பல சினிமா பாடல்களின்  வரிகள் 
என் மனதில் இணையாக  ஓடியது ! 

என் மனதில் ஓடிய  பாடல் வரிகளை  தொகுத்தேன்.
திரும்பப் படித்தேன் , 
விமர்சனமாகத் தோன்றவில்லை !
இருந்தாலும் , அப்படியே  அனுப்பிவிட்டேன்  போட்டிக்கு !

இவ்வாறு ,  நான் தொகுத்த  
சில  சினிமா  பாடல்களின்  வரிகள் ,
உங்கள்  பார்வைக்கு ! 

0-0-0-0-0-0-0-0--0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

அலைபாயும் கடலோரம்
இளமான்கள் போலே
விளையாடி....இசைபாடி..
விழியாலே..  உறவாடி
இன்பம்  காணும்  வேளையிலே, காரில்  மகனுடன்  வந்து இறங்கிய 

இஞ்சி  இடுப்பழகி,  மஞ்சச் செவப்பழகி ......

அவளைக் கண்டவுடன்,

அடி அம்மாடி.. 
ஒரு அலை வந்து மனசில அடிக்குது 
அது தானா..!


அந்த நாள்..   ஞாபகம்  
நெஞ்சிலே  வந்ததே ....  

பசுமை  நிறைந்த  நினைவுகள்.  பாடித்திரிந்த  பறவைகள்
பழகிக்களித்த  தோழர்கள் .  
தான்  வாழ்ந்திருந்த வீடும், அதன் வர்ணனைகளும்,  சபாஷ்


சந்தனத்தில்  நல்ல வாசம்  எடுத்து, தென்னங்காத்து தடவிக்கொண்டோட

அந்தரத்திலே  ரெண்டு  பச்சைக் கிளிகள்  
நல்ல  ஆலோலம்  பாடுது உன்னைப்ப் பாத்து.

அதில்  ஒருத்தி,

ஒரு பக்கம் பாக்குரா,
ஒரு  கண்ணை  சாய்க்குரா ..

உன்மேல  ஆசைப் பட்டு  
பார்த்துப் பார்த்து  நின்றாளே ..

கன்னிப் பொண்ணு  கண்ணுக்குள்ள 
கத்திச் சண்டை  கண்டாயோ 
படபடக்கும்  நெஞ்சுக்குள்ள  
பட்டாம்பூச்சி  பார்த்தாயோ ..  

மயக்கமும்,கலக்கமும், குழப்பமும், நடுக்கமும் இல்லாமல் 

நிலவே  என்னிடம்  நெருங்காதே,
நீ  நினைக்கும்  இடத்தில்  நானில்லை.
மலரே  என்னிடம்  மயங்காதே 
நீ மயங்கும்  வகையில்  நானில்லை

என ஒதுங்கும்போது
அழகு  தெய்வம்  மெல்ல மெல்ல 
அடி எடுத்து வைத்ததோ ?

கண்கள்  எங்கே 
நெஞ்சமும்  அங்கே  
கண்டபோதே  சென்றன  அங்கே  !
 ****
உன்னிடத்தில்  என்னைக்  கொடுத்தேன்  
உன்னை    உள்ளமெங்கும்  அள்ளித் தெளித்தேன்   
என்று    கவிபாடி 

வசந்த முல்லை  போல வந்து 
அசைந்து ஆடும்  வெண் புறாவே ,
.....
இந்திர வில்  நீயே  சந்திர ஒளி  நீயே 
ஈடில்லா உனையே  என் மனம்  நாடுதே 

என  காத்திருக்க,  
அன்று  ஊரெல்லாம்  மயங்கும், உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி .  சித்திரப் பூப்போலே  சிதறும்   மத்தாப்பூ
தீயேதும்  இல்லாமல்  வெடித்திடும்  கேப்பு
இதையெல்லாம்  தவிர்த்து ,  சர வெடிக்காக  சாலையோரம்  ஒதுங்க,  " ராரா  "  என்ற அழைப்பு.  
அழைத்தவர்  குசலம் விசாரிக்க,  

அன்னம்போல  நடை நடந்து வந்து 

தின்ன  ரவாலாடும், மிக்சரும்
மாம்பழச்  சொம்பில்  குடிக்க  நீரும்  கொடுத்த உன்னவளைக்  கண்டதுடன்,   

பாவாடை  தாவணியில்  பார்த்த  உருவமா  இது 
பூவாடை   வீசி  வர  பூத்த  பருவமா 

என்று  கண்கள்   ஜதி  பாட,  மருமகனாக  ஏங்கித் துடிக்கும் மனது . 

காலம் கடந்தது ,   விதி  ஏனோ  சதி  செய்தது 

மனைவி  அமைவதெல்லாம் 
இறைவன்  (  மாதா, பிதா )
கொடுத்த  வரம்.
மனது  மயங்கி  என்ன  
உனக்கும் வாழ்வு  வரும்.

திருமணம்  முடிந்து

தேடாத  செல்வ சுகம் 
தானாக  வந்தது  போல் 
ஓடோடி  வந்த  
சொர்க்க  போகமே    
என்று  மாலையிட்ட  மங்கையுடன்  இனிதே   வாழ்ந்திருக்க

இன்று  வந்தது  அதே  நிலா.

யாரோ  ஒருவன்  வாசிக்க, அவள்  
இருட்டில் இருந்து  உன்னை  யாசிக்கிறாள் 
தவம் போல்  உன்னை  யோசிக்கிறாள் 
தவணை முறையில்  உன்னை  நேசிக்கிறாள் 
உன்னை நினைத்து நினைத்து  மனம் கிறங்குகிறாள் .

தெய்வத்தின்  மார்பில்  சூடிய  மாலை  
தெருவினிலே  விழலாமா 
தெருவினிலே  விழுந்தாலும்  
வேறோர்  கை   தொடலாமா  

என்ற  நினைப்புடன்

நீ  பார்த்த  பார்வைகள்  கனவோடு  போகும் ,
நீ  சொன்ன  வார்த்தைகள்  காற்றோடு  போகும் ,
ஊர்  பார்த்த  உண்மைகள்  உனக்காக  வாழும்  

என்று  விடை  கொடுத்த  வேந்தன்  நீ  !! 

செண்பகமே  செண்பகமே  
தென் பொதிகை  சந்தனமே  
என்று  மகன்,   மனம்  கவிழ்ந்த   மங்கை நல்லாளின் இல்லத்தில் ,  
அவளைப்  பெற்றவளைக் காண  மனம்   விழைய
 மெல்லத் திறந்தது  கதவு .

சங்கிலியால்  கட்டிப் போடப்பட்டிருந்தவளுக்கு ,  
உங்களைக்  கண்டதும் புன்  சிரிப்பு .  

இன்பத்தையே  பங்கு வைத்தால்  
புன்னகை  சொல்வது   நன்றி !

சங்கிலியால்  பிணைக்கப் பட்டவளும்  
அன்று  வந்த  அதே  நிலா தான் 

அன்று  கண்ட  வெண் புறா விற்கு   காலில்  கொலுசு.
இன்று  சங்கிலி.

அன்று  குழை ( ஜிமிக்கி )  ஆடிய  காது.
இன்று  தலை முழுதும்  புரையோடிய  புண்கள்.



என் கண்  பட்டதால்  உந்தன்  மேனியிலே 
புண்  பட்டதோ  அதை  நானறியேன் ,
நலம்  பெற வேண்டும்  நீயென்று 
நாளும்  என் நெஞ்சில்  நினைவுண்டு  

என்று மனம்  முணு முணுக்க ,
"  இறைவன் தந்த  வரம் , மனைவி  அமைவதெல்லாம்
என்ற  ஞானம்  பிறக்கிறது.


எறும்புத் தோலை  உரித்துப்   பார்க்க  யானை  வந்ததடா 
நீ  இதயத்தோலை  உரித்துப் பார்க்க   ஞானம்  வந்ததடா ! ! 

ஏழு  ஸ்வரங்களுக்குள்  எத்தனை  பாடல் ?
இதய  ஸ்வரங்களுக்குள்  எத்தனைக்  கேள்வி ?
காணும்  மனிதருக்குள்  எத்தனைச்  சலனம் ! ! !


சொந்தம்   எப்போதும்  
தொடர்  கதைதான் !
முடிவே இல்லாதது.
எங்கே  சென்றாலும் தேடி,   
உன்னை 
உன்னோடு  சேர்த்த

இனிய கதை  இது ! ! 
0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-


2 comments:

  1. அற்புதமான வரிகள் மற்றும் உரைநடை வடிவில் அமைந்துள்ளது.

    ReplyDelete
  2. அற்புதமான வரிகள் மற்றும் உரைநடை வடிவில் அமைந்துள்ளது.

    ReplyDelete